• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திர குமார் தேர்வு

June 11, 2019 தண்டோரா குழு

மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திர குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

17வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. பிரதமராக மோடி பதிவியேற்றார். அவருடன் அமைச்சர்க்களும் பதிவியேற்றனர். அதைபோல் அமைச்சர்களுக்கு இலாகாக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மக்களைவைக்கு யார் சபாநாயகராக இருப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், 17 ஆவது மக்களவைக்கு இடைக்கால சபாநாயகராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட காலத்திற்கு அவை பணிகளை இவர் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 7 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் இந்த தேர்தலில் மத்திய பிரதேசத்தின் திகம்கர் தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996 தேர்தல் முதல் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக நீடித்து வருகிறார். மேலும் இதற்கு முந்தைய ஆட்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராகவும், சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க