• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேங்காய் தொட்டிகளை மாலையாக கோர்த்தபடி ஆட்சியரிடம் மனு

June 3, 2019 தண்டோரா குழு

தேங்காய் தொட்டிகளை மாலையாக கோர்த்தபடி வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.

மதுக்கரை வட்டம் செட்டிபாளையம் பேரூராட்சி பகுதி ஓராட்டு குப்பை பகுதிகளில் இயங்கி வரும் தேங்காய் தொட்டிகள் எரித்து கரியாக்கும் நிறுவனங்களால் மாசு ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் இதன் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி தேங்காய் தொட்டிகளை மாலையாக கோர்த்தபடி வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி கூறுகையில்,

ஓராட்டு குப்பை கிராமத்தில் நிலத்தை ஆழமாக தோண்டி தேங்காய் தொட்டிகளை எரித்து கரியாக்கி விற்பனை செய்யும் நிறுவனங்களால் மாசு ஏற்படுவதாகவும் இதனால் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் இந்நிறுவனங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் படிக்க