• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை சீர் வரிசையுடன் வரவேற்ற கிராம மக்கள் !

June 3, 2019 தண்டோரா குழு

கோவை கே.ஜி.சாவடி அருகே கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை கிராம மக்கள் சீர் வரிசையுடன் வரவேற்றனர்.

கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதில் கோவை எட்டிமடை அடுத்த கே.ஜி.சாவடியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு இன்று வந்த மாணவர்களை அந்த கிராம மக்கள் சீர் வரிசையுடன் வரவேற்றனர். பொதுமக்கள் ஒன்று கூடி ரூ. 1 லட்சம் மதிப்புள்ள அனைத்து வகுப்பறைகளுக்கான முதலுதவி பெட்டி, பிரோ, சேர், குடம் என 42 பொருட்களை பள்ளி மாணவர்களுக்காக வழங்கினர்.

கடந்த ஆண்டு இப்பள்ளியில் துவங்கப்பட்ட பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கிய கிராம மக்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க