May 31, 2019
தண்டோரா குழு
பிரதமர் மோடி தலைமையில் நேற்று பதவியேற்றுக்கொண்ட புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
17வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக நேற்று நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் அவரைத் தொடர்ந்து 24 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 9 இணை அமைச்சர்களும், 24 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அவர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில்,மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.
யாருக்கு என்ன இலாக்கா?
1. ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத்துறை
2. அமித் ஷா – உள்துறை
3. நித்ய ஜெய்ராம் கட்காரி – சாலை போக்குவரத்து துறை
4. டி. வி. சதனாந்த கவுடா – ரசாயனம் மற்றும் உரத்துறை
5. நிர்மலா சீதாராமன் – நிதித்துறை
6. ராம் விலாஸ் பாஸ்வான் – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
7. நரேந்திர சிங் தோமர் – வோளண்துறை மற்றும் உள்ளாட்சித்துறை
8. ரவிசங்கர் பிரசாத் – சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு
9. ஹர்சிம்ரத் கவுர் – உணவு பதப்படுத்துதல் துறை
10. தாவார் சந்த் கெலோட் – சமூகநீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை
11. டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கர் – வெளியுறவுத்துறை
12. ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ – மனிதவள மேம்பாட்டுத்துறை
13. அர்ஜுன் முண்டா – பழங்குடி நலத்துறை
14. ஸ்மிருதி இரானி – மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை
15. டாக்டர். ஹர்ஷ் வர்தன் – மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, அறிவியல் தொழில்நுட்பம், மற்றும் புவி அறிவியல்
16. பிரகாஷ் ஜவேடகர் – சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் செய்தி ஒளிப்பரப்புத்துறை
17. பியுஷ் கோயல் – ரயில்வே, வர்த்தகம், மற்றும் தொழில்துறை
18. தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியத்துறை
19. முக்தர் அப்பாஸ் நக்வி – சிறுபாண்மை நலத்துறை
20. பிரகலாத் ஜோஷி – நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி, மற்றும் சுரங்கம்
21. டாக்டர். மகேந்திரநாத் பாண்டே – திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்
22. அர்விந்த் கணபதி சாவந்த் – கனரக தொழில்துறை
23. கிரிராஜ் சிங் – மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை
24. கஜேந்திர சிங் ஷெகாவத் – ஜல்சக்தி
இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)
1. ஜிதேந்திர சிங் – வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத்துறை
2. கிரண் ரிஜிஜூ – இளைஞர் மேம்பாடு, விளையாட்டுத்துறை
3. ஹர்தீப் சிங் புரி – வீட்டுவசதி மற்றும் உள்நாட்டு விமானத்துறை
4. மன்குஷ் எல்.மால்டாவியா – கப்பல் போக்குவரத்துறை
5. பிரல்கத் சிங் படேல் – சுற்றுலா மற்றும் காலச்சாரத்துறை
6. ராஜ்குமார் சிங் – மின்துறை
7. ராவ் இந்தர்ஜித் சிங் – திட்டமிடல், மற்றும் புள்ளவிவரங்கள் துறை
8. சந்தோஷ் குமார் கேங்வார் – தொலிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
9. ஸ்ரீ பத் யஸ்ஸோ நாயக் – ஆயுர்வேதா, சித்தா, யுனானி, யோகா, ஓமியோபதி