• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

September 30, 2016 தண்டோரா குழு

கோவை போத்தனூர் அருகே மர்ம நபர்கள் சிலர் மசூதி மீது பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் போத்தனூர் அருகே மேட்டூர் அம்மன்புதூர் என்ற இடத்தில் ஹிதயத்துல்லா சுதின் சுன்னத் ஜமாத் என்ற மசூதி அமைந்துள்ளது.இந்த மசூதி அருகேயே அதன் நிர்வாகி சுலைமான் என்பவரது வீடு அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் மசூதி மீதும் அதன் அருகே இருந்த சுலைமான் வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசி சென்றுள்ளனர்.இரு பெட்ரோல் குண்டுகள் மசூதி நிர்வாகி சுலைமான் வீட்டின் முன்பாகவும், காலி பாட்டில்கள் மசூதியின் அருகிலும் விழுந்தன.

தொழுகைக்காக வந்த இஸ்லாமியர்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போத்தனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி இஸ்லாமியர் ஒருவர் கூறுகையில்,

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டது முதல் கலவர நோக்கத்துடன் பள்ளிவாசல்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவதாகவும், இஸ்லாமியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க