• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி – சிறுத்தை சிவா திடீர் சந்திப்பு !

May 28, 2019 தண்டோரா குழு

கார்த்திக் சுப்புராஜின் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் இயக்குநர் சிவா சந்தித்துள்ளார். சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. சிறுத்தை சிவா ரஜினியின் கதை கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினி – சிவா கூட்டணி விரைவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்பார் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்றும் கூறுகிறார்கள். சிவா விஸ்வாசம் படத்தை அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.ரஜினி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. எனவே சிவாவின் கூட்டணியிலும் ரஜினி நடிக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க