• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் யானையை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு

May 27, 2019

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் யானை தாக்கி சிறுமி உள்பட 2 பேர் பலியானதை அடுத்து யானையை விரட்ட கும்கி யானைகள் வரவலைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை பகுதியில் 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ராஜன் என்ற வேட்டை தடுப்பு காவலரின் மகள் ரஞ்சனா என்பவர் கடந்த 24ம் தேதி இரவு காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். அந்த சோகத்தில் இருந்து மீளுவதற்குள் நேற்று முன்தினம் இரவு குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை அதே பகுதியைச் சேர்ந்த மாகாளி என்ற 55 வயது முதியவரை தாக்கியது இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து காட்டு யானையை விரட்ட டாப்சிலிப் கோழிக்கமுத்தி முகாமில் இருந்து நேற்று நள்ளிரவு பரணி என்னும் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு யானையாக சுயம்பு எனும் கும்கி யானையும் வரவழைக்கப்பட்ட பின் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க