• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்கா,ரஷ்யா,சீனா போன்ற நாடுகள் சாதிக்க முடியாததை அரசு பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர் – மயில்சாமி அண்ணாதுரை

May 25, 2019 தண்டோரா குழு

அமெரிக்கா,ரஷ்யா,சீனா போன்ற நாடுகள் சாதிக்க முடியாததை சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி அரசு பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர் என மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் முறையை ரத்து செய்யக்கோரியும், அரசுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை,கடலூர்,சென்னை,கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு இடங்களில் சைக்கிள் பேரணி நடத்துகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு துவங்கிய சைக்கிள் பேரணியை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேரணி ஆறு நாட்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல்,கரூர் வழியாக திருச்சியை அடைகிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர்,

தமிழகத்தில் அமெரிக்கா,ரஷ்யா,சீனா போன்ற நாடுகள் சாதிக்க முடியாததை சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி அரசு பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தகுதியும் திறமையும் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு மாணவனுக்காகவும் அரசு 30,000 ரூபாய் வரை செலவு செய்கிறது. பல்வேறு அமைப்புகளும், முன்னாள் மாணவர்களும் அரசு பள்ளிகளுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர். இதனால் கல்விதரம் உயர்ந்து வருகிறது.இதனால் மாணவர்களின் திறன் உயர்வதோடு, அடுத்த தலைமுறைக்கும் அது உதவியாக உள்ளது. அரசு பள்ளியிலும் அன்னைத்தமிழிலும் தங்கள் பிள்ளைகள் படிப்பதை ஊக்கிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதில் அகில இந்திய மாணவர் இயக்கத்தின் தலைவர் ஷானு,ஜனநாய வாலிபர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க