• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி மா.கம்யூ வேட்பாளர் பி.ஆா்.நடராஜன் வெற்றி !

May 23, 2019 தண்டோரா குழு

கோவை மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிச்ட் கட்சி பி.ஆர்.நடராஜன் 1,79,009 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

17 வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் இடம்பெறுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.ஆர்.நடராஜன் போட்டியிட்டார். பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், மநீம சார்பில் டாக்டர்.மகேந்திரன், அமமுக சார்பில் அப்பாதுரை உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், சி.பி.எம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 5,70,514 வாக்குகள் பெற்று 1,79,009 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.க வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 391505 வாக்குகளும், ம.நீ.ம -மகேந்திரன் 1,44,829 வாக்குகளும் அ.ம.மு.க -அப்பாதுரை 38,024 வாக்குகளும், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாண சுந்தரம் 60,400 வாக்குகளும் பெற்றனர். கோவையை பொறுத்தவரை நோட்டாவிற்கு 23,162 பேர் வாக்களித்துள்ளனர்.

மேலும் படிக்க