• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3,85,334 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

May 23, 2019 தண்டோரா குழு

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அபார வெற்றி பெற்றுள்ளார்.

நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக 542 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில்
பாஜக முன்னிலை பெற்று வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.

தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 343 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 93 இடங்களில் முன்னிலை. தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி அபார வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினியை 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ச்சி வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் படிக்க