• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் முகத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்துள்ளது – பிரகாஷ் டுவீட்

May 23, 2019 தண்டோரா குழு

நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.

தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 343 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 92 இடங்களில் முன்னிலை. தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதற்கிடையில், தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசிவந்த நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் வாக்குபதிவில் மூன்றாம் இடத்தை பிடித்த பிரகாஷ்ராஜ் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “என் முகத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்துள்ளது. என்னை குறிவைத்து ஏராளனமான வெறுப்புணர்வு கருத்துக்களும், நகைப்புகளும் வந்துகொண்டு உள்ளன. நான் இதனை ஏற்றுக்கொள்கிறேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும். கடினமான பயணம் இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. எனது இதுவரையிலான இந்த பயணத்திற்கு துணை நின்றவர்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க