• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

May 23, 2019 தண்டோரா குழு

திமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சல் மற்றும் சிறுநீரகத் தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,இன்று காலை முதலே திமுக பொருளாளர் துரைமுருகன் கட்சி நிர்வாகிகளிடம் வீட்டில் இருந்தபடியே தொலைபேசியில் ஆலோசனை நடத்தி வந்தார்.அப்போது அவருக்கு திடீரென உடல் நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவசர அவசரமாக வீட்டில் இருந்தவர்கள் உதவியுடன் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எனினும்,இது வழக்கமான மருத்துவ பரிசோதனை என்று டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க