May 22, 2019 
                                உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டுச்சென்றது.
12 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி 2019  இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5-ம் தேதி தென்னாப்பிரிக்காவுடன் எதிர்கொள்கிறது. 
இந்நிலையில், உலக கோப்பை போட்டிக்கான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியினர் மும்பையில் இருந்து விமானம் மூலம்  நள்ளிரவு இங்கிலாந்துக்கு புறப்பட்டுச்சென்றனர்.  முன்னதாக இந்திய கேப்டன் விராட் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து உலகப் கோப்பை குறித்து பேட்டியளித்தனர்.