• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெற்றோர் கண்முன்னே இளைஞர் கொலை

May 21, 2019 தண்டோரா குழு

கோவையில் இளைஞர் ஒருவரை அவரது பெற்றோர்கள் கண்முன்னே நள்ளிரவில் குத்தி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போத்தனூர் ஸ்ரீராம் பகுதியை சேர்ந்த ஜான்பிரிட்டோ 28. இவர் நேற்று நள்ளிரவில் போத்தனூர் பகுதியில் உள்ள மதுபான கடையில் தன்னுடைய சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதில் அங்குள்ள சில நண்பர்களுடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு செய்தவர்கள் ஜான்பிரிட்டோவை பின் தொடர்ந்து அவரது வீட்டிற்கு வந்துள்ளனர் .அப்போது அங்கு வந்த 4 நபர்கள் அவருடனும் அவர்களது பெற்றோருடனும் தகராறு செய்து ஜான்பிரிடோவை சரமாரியாக கத்தியால் குதியுள்ளனர் இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருடன் வந்த மற்றோரு நண்பருக்கு கத்தி குத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் பின் அங்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். முதற் கட்ட விசாரணையில் ஜான் பிரிட்டோ என்பவர் முன்னாள் குற்றவாளி என்பதும் உன்னி கிருஷ்ணன் என்ற கஞ்சா வியாபாரியை ஜான்பிரிட்டோ மற்றும் அவர்களது நண்பர்கள் கொலை செய்ததாக ஒரு வழக்கு நிலைவையில் உள்ளதாகவும், இவர் டெய்லர் வேலை செய்து வருவதாகவும் இதனுடன் கஞ்சா வியாபாரமும் செய்து வருவதாக தெரியவந்தது.

மேலும் படிக்க