• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பேட்டரி திருடி கையும் களவுமாக சிக்கிய திருடன் – தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

May 20, 2019 தண்டோரா குழு

கோவையில் பேட்டரி திருடி கையும் களவுமாக சிக்கிய திருடனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை ரத்தினபுரி செக்கான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இன்று மதியம் இவர் வீட்டில் புகுந்த ஒருவன் யூபிஎஸ் பேட்டரியை எடுத்து தனது சைக்கிளில் வைத்து கொண்டு சென்றுள்ளான். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இப்பகுதியில் அடிக்கடி பேட்டரிகள் திருடுபோவதால் சந்தேகமடைந்து அவனைப் பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவன் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளான். இதைத்தொடர்ந்து அவனை பிடித்து கட்டிவைத்து அடித்து அவனிடம் விசாரித்துள்ளனர். இதில் பிடிபட்ட இவன் கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தம் அப்துல் சுகானியின் மகன் ஜானீர் உசேன் என்பதும் இவன் பழைய இரும்புகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதும் இதே பகுதியில் இதற்கு முன்பும் பேட்டரிகளை திருடியதையும் ஒப்புக்கொண்டுள்ளான்.

இதனைத் தொடர்ந்து கோவை ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவனை மீட்டு காவல்நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து வேறு ஏதேனும் வழக்குகளில் தொடர்பு உள்ளதா என அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க