• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்!

May 20, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

2018 – 19 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,

‘ வரும், 2019-20 ம் கல்வியாண்டிற்கு, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இன்னொரு சீருடையும் அறிமுகம் ஆகிறது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கரும்பச்சை நிற வண்ணத்தில் கால் சட்டையும், இளம் பச்சை நிறமுள்ள கட்டமிடப்பட்ட மேல் சட்டையும் வழங்கப்பட உள்ளன. அதைபோல் 6ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சந்தன நிற வண்ணத்தில் கால் சட்டையும், சந்தன நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும் வழங்கப்பட உள்ளன.மேலும், புதிய பள்ளிச் சீருடைகள், மாணவ, மாணவியரின் மனதை கவரும் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க