• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம் !

May 20, 2019 தண்டோரா குழு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமின் வழங்கியுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; அவர் தான் நாதுராம் கோட்சே” என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.கமலின் இந்த கருத்துக்கு பாரதீய ஜனதா கட்சி, அ.தி.மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில், இந்து முன்னணி, கரூர் மாவட்டச் செயலர் ராமகிருஷ்ணன், ‘இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசிய, கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அரவக்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார்.

இப்புகாரின் அடிப்படையில், கமல் மீது, 153ஏ – மதத்தினர் இடையே கலவரம் ஏற்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரியபடி பேசுவது, 295ஏ – ஒரு குறிப்பிட்ட மதத்தினரை பற்றி பேசுவது ஆகிய பிரிவுகளில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, தன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்தார். அதில், இந்து-முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் எந்த கருத்தையும் பேசவில்லை. கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 16-ம் தேதி ஒத்திவைத்தார். இதையடுத்து, அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆஜராகி ரூ.10,000 பிணைத்தொகை செலுத்த வேண்டும் எனக்கூறி நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க