• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூரில் 103 வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டி!

May 19, 2019 தண்டோரா குழு

சூலூர் இடைத்தேர்தலில் 103 வயதிலும் மூதாட்டி துளசியம்மாள் ஜனநாயக கடமையாற்றினார்.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம்,அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் இன்று நடந்து வருகிறது. அந்த வகையில் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர். சூலூர் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வீதம் 648 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 324 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 324 வி.வி.பேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்) பயன்பாட்டில் உள்ளது.

324 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.காலை 11 மணி நிலவரப்படி சூலூரில் 25.22% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில் சூலூர் தொகுதியை சேர்ந்த
103 வயதான மூத்த வாக்காளர் துளசியம்மாள் இன்று காலை ஜனநாயக கடமையாற்றினார்.
தள்ளாத வயதிலும் வாக்களிப்பதை கடமையாக கொண்டு வாக்களித்த மூதாட்டியை அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.

மேலும் படிக்க