• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.சி மெஷின் வெடித்து மூவர் உயிரிழந்த சம்பவம் : சொத்துக்காக மூத்த மகனே கொலை செய்தது அம்பலம்

May 18, 2019 தண்டோரா குழு

திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் ஏசி வெடித்து 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது தாய், தந்தை, சகோதரரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகன் கோவர்த்தனன், மனைவி தீப காயத்ரியை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராஜி (வயது 60). இவருடைய மனைவி கலைச்செல்வி(52). இவர்களுடைய மகன்கள் கோவர்த்தனன்(30), கவுதம்(27).கோவர்த்தனனுக்கும், செஞ்சி பகுதியை சேர்ந்த தீபகாயத்திரிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையில், கடந்த 14ம் தேதி வீட்டில் ஏசி வெடித்ததில் ராஜி, கலைச் செல்வி, கவுதம் ஆகியோர் உயிரிழந்தனர். பின்னர் தகவல் அறிந்தது திண்டிவனம் போலீசார் விரைந்து வந்து, 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அப்போது அந்த அறையின் ஏ.சி. எந்திரம் தீயில் கருகிய நிலையிலும், கட்டில், மெத்தைகள் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலாகியும் கிடந்தன.

இது தொடர்பாக கோவர்த்தனன் போலீசாரிடம் கூறுகையில்,

6 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.சி. எந்திரம் வாங்கி இருந்ததாகவும், இதுவரை அதை சர்வீஸ் செய்யவில்லை எனவும், இதனால் மின்கசிவு ஏற்பட்டு, ஏ.சி.எந்திரம் வெடித்து தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறி இருந்தார்.

எனினும், ஏ.சி.எந்திரம் வெடித்ததால் 3 பேர் பலியானதாக கூறப்பட்ட அறையில் கிடந்த 2 மண்எண்ணெய் கேன், ரத்தக்கறை, கழிவறையில் இருந்த வாளியில் பெட்ரோல் வாசனை உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் கோவர்த்தனனை, தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தனர். திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தனி அறையில் வைத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.அப்போது, குடும்ப பிரச்சினையில் தாய், தந்தை, தம்பியை கொலை செய்துவிட்டு கோவர்த்தனன் நாடகமாடியது அம்பலமானது. இதை தொடர்ந்து போலீசார் கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவி தீபகாயத்திரியையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

மேலும் படிக்க