• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதன்முறையாக நடைபெற்ற தொழிற்சாலை திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கம்

May 18, 2019 தண்டோரா குழு

கோவையில் முதன்முறையாக நடைபெற்ற தொழிற்சாலை திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு துறை சார்ந்த தொழிற்சாலை துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுக்கும் வகையில், தொழிற்சாலை திடக்கழிவுகளை தொழிற்சாலைகளிலேயே எரிபொருளாகவோ அல்லது மூலப்பொருளாகவோ பயன்படுத்துவது குறித்த கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. கோவையில் முதன்முறையாக நடைபெற்ற இக்கருத்தரங்கில் கொங்கு மண்டலங்களை சேர்ந்த கோவை, திருப்பூர்,ஈரோடு,நீலகிரி உட்பட்ட பகுதிகளை சேர்ந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் மணவண்ணன்,மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக இக்கருத்தரங்கை கோவை மண்டல மாசுக்கட்டுப்பாடு சுற்றுச்சூழல் அலுவலர் நளினி துவக்கி வைத்தார்.

இதில் பேசிய அவர்,

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவுகளால் சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுபடுகிறது. இதை தடுக்க தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகளை பாதுகாப்பான மறு சுழற்சி செய்ய மாசுக்கட்டுபாட்டு வாரியம் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சாலை கழிவுகள் மேலாண்மை சங்கத்தின் சுரேஷ் மனோகரன்,

தமிழகத்தில் சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட பல்வேறு துறை தொழிற்சாலையினர் இதில் உறுப்பினராக இருப்பதாகவும் நாட்டிலேயே முதன் முறையாக துவங்கப்பட்ட இந்த சங்கத்தின் வாயிலாக தொழிற்சாலை திடக்கழிவுகள் கண்டறியப்பட்டு,மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழக அரசின் உதவியுடன் திடக்கழிவுகளை சுத்திகரித்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஒரு பொது அமைப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க