• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பா.ஜ.க அரசின் 5 ஆண்டுகள் சாதனைகளை எண்ணி பெருமைப்படுகிறோம் – பிரதமர் மோடி

May 17, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தல் பிரசாரங்கள் இன்று மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை செயலகத்தில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அமித் ஷா,

“இந்த தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி. வரும் மக்களவை தேர்தலிலும் பா.ஜ.க தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மீண்டும் பாஜக ஆட்சி அமைய வேண்டுமென்பதே மக்களின் எண்ணம். விவசாயிகள், பெண்களை கருத்தில் கொண்டு அரசு திட்டங்களை வகுத்து வருகிறோம். மோடி ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளதாக மக்கள் எண்ணுகின்றனர்“ என பாஜகவின் வளர்ச்சி திட்டங்களை அமித்ஷா முன்வைத்தார்.

பின்னர் பேசிய நரேந்திர மோடி,

“பா.ஜ.கவின் மக்களவை தேர்தல் பிரசாரம் சிறப்பாக முடிவடைந்துள்ளது. பரபரப்புரை முடிவடைந்துவிட்டதால் நான் சற்று நேரம் இழைப்பறலாம். பா.ஜ.க அரசின் 5 ஆண்டுகள் சாதனைகள் எண்ணி பெருமைப்படுகிறோம். ஆட்சியில் நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளோம். மக்களின் ஒருமித்த ஆதரவு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை உள்ளது. நாட்டை ஆள்வதற்கு எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின், வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம். இது ஜனநாயகத்தை கொண்டாட வேண்டிய தருணம். தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி. கடந்த 2 தேர்தல்களில், ஐபிஎல் போட்டி கூட நடைபெறவில்லை. அரசு வலுவாக இருந்தால், ஐபிஎல், ரம்ஜான், பள்ளி பரீட்சை இன்னும் பிறவும் அமைதியாக நடக்கும். பண்டிகை மற்றும் கிரிக்கெட் போல, தேர்தலும் ஒரு திருவிழாவை போல நடக்கிறது.

கட்சியில் சிலர் பேசும் சர்ச்சை பேச்சுகளுக்கு பாஜக பொறுப்பேற்காது. பாஜக ஆட்சியால் சர்வதேச நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்த இந்தியாவால் முடிந்தது. நாங்கள் மீண்டும் வரலாறு படைப்போம், அதற்கு உங்களின் ஆசீர்வாதங்கள் எங்களுக்கு தேவை. அறுதி பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரும்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

பிரதமராக பதவியேற்ற பின் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திப்பது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க