• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் யானையைக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி கைது

May 17, 2019 தண்டோரா குழு

கோவையில் யானையைக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளியை வனத்துறையினர் இன்று கைது செய்தனர்.

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பெரியதடாகம் பகுதியில் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடியை வைத்து அதனை கடித்ததால் குட்டி யானை ஒன்று இறக்க நேரிட்ட சம்பவம் கடந்த 29.7.2016 அன்று நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக கோவை வனச்சரகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த செங்கா (எ) ராஜேந்திரன் என்பவர் மட்டும் தலைமறைவாகினார். இது தொடர்பாக 9.8.2016 அன்று தனிக்குழு அமைக்கப்பட்டு அவரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டது. இத்தனிக்குழுவினரால் மேற்படி செங்கா பிடிக்கப்பட்டபோதும் எதிர்பாராத விதமாக அப்போதும் தப்பியோடிவிட்டான்.

இந்நிலையில் இன்று (17.5.2019) காலை சுமார் 8.40 மணியளவில் கோவை வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் தடாகம் பிரிவு வனவர் சாரம்மாள், வனக்காப்பாளர் ரங்கசாமி மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் அடங்கிய குழுவினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது வீரபாண்டி பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் மேற்படி யானைக்குட்டியை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த செங்கா (எ) ராஜேந்திரன் என்பது உறுதி செய்யப்பட்டது. மேற்படி நபர் வன அலுவலர்களால் கைது செய்யப்பட்டு விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைதான நபரை கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷின் அறிவுரைப்படி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.I முன் நேர் நிறுத்தி நீதிமன்ற காவலில் சிறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் படிக்க