• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற மருத்துவர் பலி !

May 17, 2019

கோவா கடற்கரையில் மருத்துவர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சித்த போது அலைகளால் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த ரம்யா கிருஷ்ணா என்ற இளம் பெண் கோவா அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். மருத்துவம் படித்து இளம் வயதிலே அரசு மருத்துவராக சேவையாற்றி
வந்த அவர் சுற்றி பார்ப்பதற்காக நேற்று மாலை கோவா கடற்கரைக்கு சென்றுள்ளார்.அங்கு அலைகளுக்கு நடுவே நின்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென பெரிய அலை வந்த நிலையில் அந்த அலையில் அவர் திடீரென அடித்து செல்லப்பட்டார். அலையின் சுழலில் சிக்கிய அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து, பெரும் போராட்டத்திற்கு பிறகு அவரது உடலை அப்பகுதியை சேர்ந்த மீனவர்களும் காவல்துறையினரும் மீட்டனர். அவருடைய உடல் இன்று காலை அவருடைய சொந்த ஊருக்கு இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

இளம் பெண் செல்ஃபி மோகத்தால் அலைகளால் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க