• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோட்சேவை ஏன் ‘இந்து’ என குறிப்பிட்டு கூறினீர்கள்? – கமலுக்கு நடிகர் விவேக் ஓபராய் கேள்வி

May 13, 2019 தண்டோரா குழு

கோட்சே ஒரு தீவிரவாதி என நீங்கள் கூறி இருக்கலாம். ஏன் ‘இந்து’ என குறிப்பிட்டு கூறினீர்கள்? என கமல்ஹாசனுக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்,

முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார். கமலின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

அன்புள்ள கமல், நீங்கள் ஒரு சிறந்த கலைஞன். கலைக்கு எப்படி மதம் கிடையாதோ, அதேபோல் தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது. கோட்சே ஒரு தீவிரவாதி என நீங்கள் கூறி இருக்கலாம். ஏன் ‘இந்து’ என குறிப்பிட்டு கூறினீர்கள்?. நீங்கள் வாக்கு கேட்கும் இடத்தில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் உள்ளார்கள் என்ற காரணத்திற்காகவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு மிகச்சிறு கலைஞனாக, ஒரு மாபெரும் கலைஞனிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றே. தயவுசெய்து நாட்டை துண்டாக்காதீர்கள். ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க