• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உலக அமைதி வேண்டி மகா யாகம், ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்பு

May 13, 2019 தண்டோரா குழு

ஸ்ரீ ஆனந்த கல்பகா பவுண்டேசன் சார்பில் உலக அமைதி வேண்டி மகா யாகம் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய தலைவர் மோகன்
பகவத் கலந்து கொண்டு பொன்விழா மலரை வெளியிட்டார்.

கோவை ஒண்டிப்புதூரை அடுத்த காமாட்சிபுரி ஆதினத்தில் உலக அமைதி வேண்டி மகா யாகம் நடைபெற்றது. உலகில் மழை வேண்டியும், இயற்கை வளம் சிறக்கவும் ,பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து அப்பாவி பொதுமக்களை காக்கவும் என உலக அமைதிக்காக நடைபெற்ற இந்த யாக வேள்வியில் ஸ்ரீ ஆனந்த கல்பக பவுண்டேசன் நிறுவனர் ஈஸ்வரன், மகேந்திரன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, 50 வது ஆண்டை பூர்த்தி செய்து நடைபெற்ற பொன்விழாவில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் கலந்து
கொண்டு பொன்விழா மலரை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பக்தர்கள் பயனடையும் விதமாக ஆதினத்தின் முழு விவரங்கள் அடங்கிய வலைதள பக்கத்தையும் வெளியிட்டார்.

மேலும் படிக்க