• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எங்களுக்கு பின் இந்த தொழிலை செய்ய யாரும் தயாராக இல்லை – மூங்கில் தொழிலாளி வேதனை

May 10, 2019 எம். அருண் குமார்

காடுகளில் நிலவும் அமைதிக்கு மத்தியில் ஒருவிதமாக சப்தம் கேட்பதை நாம் உணர்ந்திருப்போம். பச்சை நிறத்தில் நாம் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு நிளமாக இருக்கும் மூங்கில் மரங்கள் அது. வீட்டை அழகு படுத்த அலங்கார பொருட்கள் வைப்போம். அதில் ஏதாவது ஒருவகையில் மூங்கில் மரங்களில் ஆன கைவினை பொருட்கள் கண்டிப்பாக இருக்கும். பாரம்பரிய கட்டிட கலையில் இருந்து தற்போது உள்ள அழகு சாதன பொருட்களை வைக்கும் ஜாடிகள் வரையிலும் மூங்கிலின் பயன்பாடுகள் அதிகம் உள்ளது.

இருப்பினும் மூங்கில் மரங்களின் பயன்பாடுகள் பற்றி நமக்கு தெரிந்தவை சிலவற்றையே.ஆனால் இவைகள் எங்கு வளர்கின்றன? எவ்வாறு இவைகள் பராமரிக்கப்படுகின்றன? எவ்வாறு கைவினை பொருட்கள் செய்யப்படுகிறது? என்பது குறித்து அவ்வளவாக நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இது குறித்து மரங்களை கைவினை பொருளாக செய்து விற்பனை செய்யும் தேவராஜிடம் பேசிய போது,

மூங்கில் மரங்கள் பெரியதாக வளரும் ஒரு புல் வகையைச் சேர்ந்ததாகும். இந்த மரங்கள் பொதுவாக மலைப்பகுதியில் பரவலாகக் காணப்படும். இந்த மரங்கள்
வளர்வதற்கு அதிக நீரோ, பராமரிப்போ தேவையில்லை. வறண்ட நிலப்பரப்புகளே இவை வளர்வதற்கு ஏற்ற இடமாகும். இந்த மூங்கில் மரங்கள் மலைப்பகுதியில் இருந்து லாரி, டெம்போ போன்ற வாகனங்களில் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்படுகிறது.இந்தியாவில் அதிகபட்சமாக 150 வகையிலான மூங்கில் பொருட்கள் செய்யப்படுகின்றது. மூங்கில் ஸ்க்ரீன் போன்ற பாய் வகைகள், பழக் கூடை, அதன் நாரிளிருந்து வளப்பைகள், ஏணி மற்றும் குடில்கள் கூட இவற்றின் மூலம் செய்யப்படுகிறது. நமக்கு இனிமையான இசையைத் தரும் புல்லாங்குழலும் இதில் அடங்கும். இந்த மூங்கில்களை ஒரு பொருளாக மாற்றும்போது அதிக உதறி பாகங்கள் ஏற்படும். ஆனால் அவையும் கூட இறுதியில் ஒரு சிறிய கைவினை பொருளாகவும் உபயோகமுள்ள பொருளாகவும் மாற்ற முடியும். வெறும் மூங்கில்களாக, மரங்களாக வரும் மூங்கில்கள் கைவினை கலைஞர்களால் ஒரு உருவம் பெற்று அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மூங்கிலை வாங்கும்போதும் விற்கும் போதும் ஏற்படும் இன்னல்கள் அதிகம். தற்போது, மூங்கிலை மரவகை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கிவிட்டது. இதனால் மூங்கிலை வாங்குவதும் விற்பதும் எளிதாகிவிட்டது.

மூங்கிலை செய்யும் போதும், அவற்றை விற்கும் போதும் ஒருவித மன ஆறுதல் கிடைக்கும். பொதுவாக கிறிஸ்துமஸ் காலங்களில் புல்கூடு எனப்படும் குடில் செய்ய அதிகம் ஆர்டர்கள் மைசூர், கேரளா, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து வரும்.அவற்றின் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும். இவ்வாறு ஆர்டர்கள் வரும் நேரங்கள் தவிர, மற்ற நேரங்களில் போதிய அளவு வருமானம் கூட கிடைப்பதில்லை. கிடைக்கும் சிறு சிறு ஆடர்களை வைத்து தான் எங்களது அன்றாட வாழ்கையை நடத்தி வருகிறோம். இவற்றின் பயன்பாடுகள் அதிகமாக இருந்தும் அதனை வாங்குபவர்களும் கணிசமாகவே உள்ளனர். பிளாஸ்டிக்கில் இந்த மாறியான பொருட்கள் தயாராகுவதினாலும் இந்த தொழிலை தலைமுறை தலைமுறையாக செய்து வரும் எங்களுக்கு பின் இந்த தொழிலை செய்ய யாரும் தயாராக இல்லை. அனைவரும் அதிகம் வருமானம் ஈடும் தொழிலை நோக்கியே பயணிக்கின்றனர் என தேவராஜ் வேதனை தெரிவித்தார்.

மேலும் படிக்க