• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு கோவையில் குழந்தை வளர்ப்பு குறித்து கருத்தரங்கம்

May 9, 2019 தண்டோரா குழு

உலக அன்னையர் தினம் வரும் 12ம் தேதி அன்று குழந்தை வளர்ப்பு குறித்து தாய்மார்களுக்கு விளக்கும் வகையில், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலக அன்னையர் தினம் வரும் 12ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை பேரெண்டிங் நெட்வொர்க் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா,

அமைதியான மகிழ்வான பேறு காலம் மற்றும் பிரசவம் மேற்கொள்ள “Heart in the Tummy 2” நிகழ்வினை நடத்த உள்ளோம். தனியார் விடுதியில் நடைபெறும் இந்நிகழ்வில் பர்த் இந்தியா அமைப்பின் நிறுவனர் ரூத் மாலிக், மகப்பேறியில் மற்றும் பெண்ணியல் மருத்துவர் பிரமலதா, பாலூட்டுதல் ஆலோசகர் யபத் யாஸ்மின், சுக பிரசவ ஆலோசகர் பிரியங்கா இதிசுலா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில், பிரசவம் தொடர்பான பல்வேறு கலந்துரையாடல் நடைபெறும்.
சிசேரியன் மூலம் முதல் பிரசவம் ஆகி இருப்பின், அடுத்த குழந்தையும் அதேபோல் சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்க வேண்டும் என்பது இல்லை என பலருக்கு போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை. இது போன்ற பல்வேறு சந்தேகங்கள் குழந்தை வளர்ப்பு குறித்து தாய்மார்களுக்கு விளக்கும் வகையில், இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும், தங்களது அமைப்பின் மூலம் பல்வேறு சந்தேகங்களுக்கு ஐவர் கொண்ட குழு தொடர்ந்து பெண்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சி பாப்பீஸ் ஹோட்டலில் வரும் 12ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பதிவு கட்டணமாக 800 ரூபாயும், 9ம் தேதிக்கு முன் முன்பதிவு செய்பவர்களுக்கு 650 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க