• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மறைமாவட்டத்தில் முதன் முறையாக சி.பி.எஸ்.இ.பாடப்பிரிவு பள்ளி துவக்கம்

May 9, 2019 தண்டோரா குழு

கோவை மறை மாவட்டத்தை உள்ளடக்கிய திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில், 33 பள்ளிகள் உட்பட 140க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நீண்டநாட்களாக குறைந்த கட்டணத்தில் சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவு பள்ளியை துவக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளி எனும் சி.பி.எஸ்.இ.பாடப்பிரிவு பள்ளியை கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவைனஸ் துவக்கி வைத்தார். இந்த துவக்க விழாவில் கோவை மறைமாவட்ட அனைத்து கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் மரியஜோசப் , ஸ்ரீதேவி சில்க்ஸ் உரிமையாளர் சிவகணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ்,

குறைந்த கட்டணத்தில் உயர்தர கல்வியை வழங்கும் நோக்கத்தில் இந்த பள்ளி துவங்கப்பட்டுள்ளதாகவும் ஏழைகளும் இந்த பாடப்பிரிவில் பயில்வதற்கு வசதியாக இந்த பள்ளி துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க