பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாமி என்ற நோயாளி கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சீதா இவர்கள் குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் அங்கு உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். ஏற்கனவே ஆஸ்மா நோய் முதுகுத்தண்டு வலியால் பாதிக்கப்பட்டு இருந்த கோவிந்தசாமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண்கள் பிரிவில் உள்நோயாளியாக அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று நீண்ட நேரம் படுக்கையறையில் கோவிந்தசாமியை காணவில்லை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் கோவிந்தசாமியை காணவில்லை பின்னர் அங்குள்ள கழிவறையில் சென்று பார்த்தபோது அவர் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததைக் கண்டு அங்குள்ள நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர், பின்னர் மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அறையில் வைத்தனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதாவது காரணங்கள் உண்டா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனை கழிவறையில் நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
” ஷேமா கிசான் சாத்தி “திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டாண்மை
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் தினத்தை கொண்டாடியது
கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்
தென்னிந்தியாவில் தனது வணிக நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துகிறது ஆர்.எஸ்.டபிள்யூ.எம். நிறுவனம்