• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

3 எம்.எல்.ஏகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகருக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

May 6, 2019 தண்டோரா குழு

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.

அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகியோர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாகவும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறி அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, சபாநாயகர் தனபால் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கிடையில், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி, திமுக சார்பில் பேரவை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனிடையே, 3 எம்எல்ஏ-க்கள் மீதான நடவடிக்கைக்கு தடைகோரி, அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சபாநாயகர் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார். தொடர்ந்து இது குறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும் படிக்க