• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூரில் 66 வாக்குசாவடிகள் பதட்டமானவை – தேர்தல் பிரிவு டிஜிபி அசுதோஷ்சுக்லா

May 2, 2019 தண்டோரா குழு

தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று அறிக்கை கொடுத்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க தேர்தல் பிரிவி டிஜிபி அசுதோஷ்சுக்லா மறுப்பு,இந்த செய்தியாளர் சந்திப்பில் ரகசியமான தகவல்களைக் குறித்து பேச முடியாது எனவும் அது குறித்து கேட்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கோவை சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் சூலூர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக காவல் துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, டிஐஜி கார்த்திகேயன், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரன்,கோவை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சுஜித்குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைக் சந்தித்த தேர்தல் பிரிவு டிஜிபி அசுதோஷ்சுக்லா,

35 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகின்றது. அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.பணம் கொடுப்பது தொடர்பான புகார்கள் வந்தால் 1950 என்ற எண்ணிக்கு தகவல் சொல்லாம். சூலூரில் 66 வாக்குசாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்ற அறிக்கை கொடுத்துள்ளது தொடர்பான கேள்விற்கு பதில் அளிக்க மறுத்த அவர், சில ரகசியமான தகவல்களை வெளியிட முடியாது எனவும் அதைக் இந்த செய்தியாளர் சந்திப்பில் கேட்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.மேலும் பணம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளைக் முழுமையாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,பணம் கொடுப்பதை தடுக்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதுவரை சூலூர் தொகுதியில் மட்டும் 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் உட்பட விதிமுறைகளைக் மீறியது தொடர்பாக இதுவரை 4723 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக சூலூர் தேர்தல் பணிக்காக 4123 போலீஸார் பாதுகாப்பு பணியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க