• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தங்க மங்கை’ கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் பரிசுத்தொகை அறிவிப்பு

May 2, 2019 தண்டோரா குழு

‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் தலைநகர் தோஹாவில் 23வது ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாாிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தார்.

தங்கப் பதக்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினரும், பெரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.இதுதவிர சமூக வலைத்தளங்களிலும் கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதைத்தொடர்ந்து, அவருக்கு திமுக, அதிமுக காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் நிதியுதவி அளித்தது. அதைப்போல் நடிகர்கள் ரோபோ சங்கர், விஜய்சேதுபதி உள்ளிட்டோரும் நிதியுதவி அளித்தனர்.

இந்நிலையில், ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவ்-க்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க