• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பரளிக்காடு சூழல் சுற்றுலா வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் – வனத்துறை அறிவிப்பு

May 2, 2019 தண்டோரா குழு

கோடைக்கால கொண்டாட்டமாக வனத்துறை நடத்தும் பரளிக்காடு சூழல் சுற்றுலா வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் என கோவை மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து பில்லூர் அணை செல்லும் வழியில் உள்ள இயற்கை எழில் மிகுந்த பரளிக்காடு என்னுமிடத்தில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா நடைபெற்று வருகிறது. ஒரு நாள் இயற்கையோடு இணைந்து வாழ்வோம் என விரும்பி இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம். பில்லூர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் மணிக்கணக்கில் பரிசல் பயணம், இங்குள்ள பழங்குடியின மக்கள் சமைத்து தரும் சத்தான உணவு, வனத்தினுள் நடைப்பயணம், பவானியாற்றில் ஆனந்த குளியல் என காலை முதல் மாலை வரை நடைபெறும் இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்க விரும்பி பலரும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து காத்திருக்கின்றனர். 100 பேர் என்ற அடிப்படையில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு என இரு நாட்கள் மட்டுமே சூழல் சுற்றுலா நடைபெறும் என்பதால் பலரும் அனுமதி சீட்டு கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருந்தனர்.

குறிப்பாக, இந்த கோடைக்கால சீசனில் இங்கு வர விரும்புவோர் எண்ணிக்கை மிக அதிகம். இதனை கருத்தில் கொண்டு, இந்த மே மாதத்தில் மட்டும் வாரத்தில் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகள் தவிர மீதமுள்ள ஐந்து நாட்களும் சூழல் சுற்றுலா நடத்தப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து காரமடை வனச்சரக அலுவலர் சரவணன் கூறும் போது, “ஒரு நாளேனும் நகர வாழ்வில் இருந்து விடுபட்டு அடர்ந்த பசுமை காட்டின் நடுவே இயற்கையோடு இணைந்து இருக்க விரும்புவோரின் மனதில் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சுற்றுலா வருபவர்களுக்கு இயற்கையின் முக்கியத்துவத்தையும் அதனை காக்க வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கி கூறுகிறோம். இப்பகுதி பழங்குடியின மக்களோடு இணைந்தே இந்த சூழல் சுற்றுலாவை வனத்துறை நடத்தி வருகிறது என்பதோடு, இதில் கிடைக்கும் வருவாய் அவர்களின் நலனுக்காக மட்டுமே செலவிடப்பட்டு வருகிறது,” என்றார். வனத்துறையின் அறிவிப்பை அடுத்து பலரும் சூழல் சுற்றுலாவில் பங்கேற்க முன்பதிவு செய்து வருகின்றனர்

மேலும் படிக்க