• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

April 30, 2019 தண்டோரா குழு

தமிழ்நாடு மாநிலத்தின் கராத்தே அலுவலகம் திறப்பு விழா மற்றும் தேசிய அளவிலான கொடை ஷிடோ கப்-2019 கராத்தேப் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா கோவையில் இன்று நடைபெற்றது.

கோவை, சுந்தரபுரம் பகுதியில் தமிழ்நாடு மாநிலத்தின் கராத்தே அலுவலகம் திறப்பு விழா மற்றும் தேசிய அளவிலான கொடை ஷிடோ கப்-2019 கராத்தேப் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற அலுவலக திறப்பு விழாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கராத்தே தலைவர் சென்சாய். சாய் புரூஸ் அலுவலகத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் கராத்தே சங்க பயிற்சியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த
தமிழ்நாடு மாநிலத்தின் கராத்தே தலைவர் சென்சாய்,

கோவையில் முதல் முறையாக தமிழ்நாடு மாநிலத்தின் கராத்தே அலுவலகம் திறப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது கராத்தே பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் பங்குபெற்று தமிழ்நாடு மாநிலத்தின் கராத்தே சங்கத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். எங்களது பயிற்சி ஆசிரியர்கள் சிறப்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகின்றன. தற்போது கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலில் 28/04/2019 அன்று நடைப்பெற்ற தேசிய அளவிலான கொடை ஷிடோ கப்-2019 கராத்தேப் போட்டியில், கோவை மற்றும் திருப்பூர் சாய் காய் டூ சார்பாக மாணவ-மாணவிகள் கலந்துக் கொண்டு பதக்கங்களை வென்றனர். 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கம் 26 ,வெள்ளி 12, வெண்கலம் 8 என மொத்தம் 46 பதக்கங்களை வென்றுள்ளனர். மேலும், பல்வேறு கராத்தே போட்டிகளில் எங்கள் மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைப்பார்கள் என்றார்.

வெற்றி பெற்ற மாணவர்களை அகில இந்தியா சாய் காய் டூ தலைவரும், தமிழ்நாடு சங்க தலைவரும் சென்சாய் சாய் புரூஸ் மற்றும் பயிற்சியாளர்கள் அறிவழகன், புரமோஸ், மோகன், ராஜேஷ், ரவி சங்கர், முரளி மற்றும் செல்வ சங்கர் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

மேலும் படிக்க