• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி வழக்கு : தமிழக அரசு, சிபிஐ, சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

April 30, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை தொடர்பாக தமிழக அரசு, சிபிஐ, சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்த நிலையில் சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரைத்தது.

எனினும் கடந்த 26ம் தேதி வரை இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியது,இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பெற்ற வாக்குமூலம் மற்றும் விசாரணை ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை பெண் அதிகாரி தலைமையில் நடத்த சிபிஐக்கு உத்தரவிடக் கோரி வழக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. கோவை மாவட்ட செயலாளர் ராதிகா தொடர்ந்த இந்த வழக்கில் புதிதாக 4 வீடியோக்களை சிபிசிஐடியிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வழங்கியது.

மேலும், இந்த வழக்கில் புதிதாக வழங்கிய 4 வீடியோக்களின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜூன் 12-க்குள் தமிழக அரசு, சிபிஐ, சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க