• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் அடுக்குமாடி குடியிருப்பில் அனுமதியில்லாமல் கொடுக்கப்பட்ட கேபிள் இணைப்பு அகற்றம்

April 29, 2019 தண்டோரா குழு

உக்கடம் திட்டபகுதியில் ( புல்லுகாடு ) அடுக்குமாடி குடியிருப்புகளில் முறையாக அனுமதி இல்லாமல் கேபிள் டிவி ஆப்ரேட்டரின் கேபிள் டிவியின் மெயின் இணைப்பு ஒயர்களை தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அகற்றினர்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கோயமுத்தூர் கோட்டம் சார்பாக உக்கடம் திட்டபகுதியில் ( புல்லுகாடு ) அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2018 டிசம்பர் 17ம் தேதி
தமிழக முதலமைச்சர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆக்கிரமித்து வீடுகள் அமைத்து வாழ்ந்து வந்த பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு இந்தப் பகுதிகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடியேறி வந்துள்ளனர்

இதற்கிடையில்இந்த குடியிருப்புகளுக்கு கேபிள் டிவி இனைப்பு வழங்கு வதற்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக சுல்தான் என்பவருக்கு முறையாக அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில், உக்கடம் பகுதி (புல்லுகாடு ) அடுக்கு மாடி குடியிருப்பில் அனுமதி இல்லாமல் அத்து மீறி வீடுகளுக்கு கேபிள் டிவி

இணைப்பு வழங்கிய கோவை உக்கடம் GM நகர் பகுதியை சேர்ந்த பாபு , குஞ்சா என்பவரின் கேபிள் டிவி ஆப்ரேட்டரின் கேபிள் டிவியின் மெயின் இணைப்பு ஒயர்களை காவல்துறை உதவியுடன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உதவி பொறியாளர் வெங்கட் தலைமையில் ஆக்கிரமைப்பு ஒயர்களை இன்று அப்புறப்படுத்தினர்

இது தொடர்பாக அதிகாரி கூறுகையில்,

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக கட்டபடும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு கேபிள் டிவி இணைப்பு வழங்குவதற்க்கு முறையாக அனுமதி பெற வேண்டும் அப்படி அனுமதி பெறபட்டவர்கள் மட்டுமே இக்குடியிருப்புகளுக்கு கேபிள் டிவி இனைப்பு வழங்க முடியும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க