• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடிசைப்பகுதிகளிலும் சிசிடிவி காமிராக்கள் பொறுத்த வேண்டும் – கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

April 29, 2019 தண்டோரா குழு

துடியலூரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு நிவாரணத்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கிதனர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

துடியலூர் பகுதியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யபட்ட விவகாரத்தில் தமிழக அரசு வழங்கிய ரூ.300000 லட்சம் நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில் பாலியல் குற்றங்களை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குடிசைப்பகுதிகளில் சிசிடிவி காமிராக்களை பொருத்தி குற்றங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்க வேண்டும். பாலியல் குற்றங்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்துவதோடு அப்பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதேபோல் மாவட்ட அளவில் பொதுக்கழிப்பறைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் படிக்க