• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் தங்களுடன் தொடர்பில் உள்ளனர் – மம்தாவிற்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

April 29, 2019 தண்டோரா குழு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 40 பேர் பாஜகவுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, பிரதமர் நரேந்திரமோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் செராம்பூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் மக்களை வாக்களிக்க விடமால் தடுக்க முயற்சிப்பதுடன், பாஜக தலைவர்களையும் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்து பாஜக தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள். மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது அனைத்து இடங்களிலும் தாமரை மலரும்.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 40 பேர் பாஜகவுடன் தொடர்பில் இருக்கின்றனர். மக்களவை தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் கட்சியில் விலகி பாஜவில் இணைய போகிறார்கள். மம்தா அரசியலில் சறுக்கப்போகிறார்.மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு முதலமைச்சராக இருக்க முடியாது. மம்தாவால் கனவில் கூட பிரதமர் ஆக முடியாது. குறைந்த அளவிலான சீட்டுகளை வைத்துக் கொண்டு டெல்லிக்கு அவரால் வர முடியாது. அனுமதி முதல் சேர்க்கை வரை அனைத்து விதத்திலும் மம்தாவின் அரசால் மக்கள் பணத்தை இழக்கிறார்கள். மம்தாவிற்கு தோல்வி பயம் வந்து விட்டது அதனால் தான் அவருக்கு அடிக்கடி கோபப்படுகிறார்.

என்னை மட்டும் அவதூறாக பேசி வந்த எதிர்க்கட்சிகள், தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும் குறை கூறி பேசி வருகிறார்கள். இந்த தேர்தலில் தோல்வி கிடைத்துவிடும் என எதிர்கட்சிகள் அஞ்சுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மேலும் படிக்க