• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாட்ஸ் ஆப்பால் பேஸ்புக்கின் வருமானம் பாதிக்கப்படுகிறது – பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்

April 26, 2019 தண்டோரா குழு

வாட்ஸ் ஆப்பால் வருமானம் இல்லை எனவும், இதனால் பேஸ்புக்கின் வருமானம் பாதிக்கப்படுவதாகவும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வீடியோ கான்பரன்சிங் மூலம் பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களிடம் இன்று பேசினார்.
அப்போது, சமூக ஊடக செயலிகளை இந்தியர்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள், இது அமெரிக்க மார்க்கெட்டுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. பிரச்சினைக்குரிய டேட்டாக்களை நாங்கள் சேகரித்து வைப்பது கிடையாது. பல்வேறு நாடுகளின் வலுவில்லாத சட்ட திட்டங்களால் டேட்டாக்கள் திருடப்படுகிறது. பெரிய நாடுகளில் டேட்டாக்களுக்கு தடை விதிப்பதன் மூலம் எங்களது வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் வாட்ஸ் ஆப் மிகவும் பிரபலமாக உள்ளது. தனி நபர் விவரங்களை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, அதில் லாபம் எதுவும் கிடைக்கவில்லை.இதனால் பேஸ்புக்கின் வருமானம் பாதிக்கப்படுவதாகவும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க