• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசுக்கு எதிராக உள்ள 4 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்க சபாநாயகர் முடிவு

April 26, 2019

3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார்.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனையில்,அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். அதேபோல், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். இதனால் மேற்கூறிய 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.

இந்த நோட்டீஸுக்கு இந்த எம்.எல்.ஏக்கள் அனுப்பும் பதிலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க