• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்

April 26, 2019

வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வாரணாசி மக்களவை தொகுதிக்கு மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதி துவங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த முறையும் மோடியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்காக பாஜகவினர் இரவு பகலாக தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.

நேற்று வாரணாசியில் நேற்று மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று வாரணாசியில் உள்ள காகாலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்த மோடி பின்னர் அங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டார். 11.30 மணியளவில் வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற அவர், தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிரோமனி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்சிங் பாதல், ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் கூட்டணி கட்சியினரும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராயும், சமாஜ்வாடி சார்பில் ஷாலினி யாதவ் என்ற பெண் வேட்பாளரும் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க