• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பாஜகவினர் பிரம்மாண்ட பேரணி – லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

April 25, 2019 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில், பிரம்மாண்டப் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக களம் இறங்கும் பிரதமர் மோடி நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இதற்காக இன்று மாலை வாரணாசி வந்தார். இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி, வாரணாசி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 6 கிமீ தூரம் பிரம்மாண்டப் பேரணியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திறந்த வாகனத்தில் நின்றவாறு வாக்காளர்களிடையே வாக்கு சேகரித்தார். இந்தப் பேரணியில், லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

பேரணியில் பா.ஜ., தலைவர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கின்றனர். பேரணி துவங்கும் இடத்திற்கு வந்த பிரதமர் அங்கு இருந்த மாளவியா சிலைக்கு மாலை அணிவித்தார். மேலும், இப்பேரணியில் தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் , தேனி லோக்சபா தொகுதி அ,.தி,மு.க., வேட்பாளருமான ரவீந்திரநாத்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க