• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு : 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு

April 25, 2019 தண்டோரா குழு

இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. 9பேரில் இரு பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி இலங்கையில் நேற்றைய தினம் தேவாலயங்களில் பொதுமக்கள் குவிந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பில் 350 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கொண்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 24க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. அதில் 3 பெண்களும் இடம் பெற்றுள்ளனர். தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பிருப்பதாக கருதப்படும் இவர்களை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க தொலைபேசி எண்களும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
தகவல் இருப்பின் பொதுமக்கள் கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்: இலங்கை காவல்துறை: 0718591771, 0112422176 & 0112395606

மேலும் படிக்க