• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகின் மிகப்பெரிய பெண்கள் அமைப்பான, YWCA வின் நிறுவன தினம் கோவையில் கொண்டாட்டம்

April 25, 2019 தண்டோரா குழு

உலகின் மிகப்பெரிய பெண்கள் அமைப்பான, YWCA வின் நிறுவன தினம் கோவையில் கொண்டாடப்பட்டது.

சமுதாயத்தில் கல்வி மற்றும் செயல்பாட்டுடன் வேலை செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு எதிராக துவங்கப்பட்ட அமைப்பு YWCA எனும் அமைப்பு. பெண்களின் தலைமையையும், கல்வியையும் அதிகரிக்கவும் பெண்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டியும் பல்வேறு பணிகளை செய்து வரும் இவ்வமைப்பின் நிறுவன தினம் கோவையில் கொண்டாடப்பட்டது.

அவ்வமைப்பின் தலைவர் ஷர்மிளா பிரின்ஸ் தலைமையில் நடைபெற்ற இதில் ஆஷா செந்தில் மற்றும் ஷீலா ஜான் ஆகியோர் வரவேற்று பேசினர். நிகழ்ச்சியில் ஷேலோம் எனும் முதியோர் இல்ல கட்டமைப்பு நிதி திரட்டுவதெற்கென கல்லினெரி ரெசிபிஸ் எனும் சமையல் கலை புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை ரெசிடென்சி டவர்சின் தலைமை சமையல் கலை நிபுணர் அசோக்குமார் வெளியிட்டு பேசுகையில், பெண்கள் நமது பாரம்பரிய சமையல் கலையை அழியாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.தமிழர்களின் பழங்கால உணவு பழக்க முறைகளே நோயற்ற வாழ்வை தரும் என தெரிவித்தார்.

விழாவில் YWCA அமைப்பின் உறுப்பினர்கள் ரோஸ்லின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க