• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆபாச வீடியோக்களை டிக்டாக்கில் பதிவேற்றினால் போனில் டிக்டாக் தானாக செயல் இழந்து விடும் – டிக் டாக் நிறுவனம்

April 24, 2019 தண்டோரா குழு

சிறுவர்கள், சிறுமிகள், பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் டிக்-டாக் செயலி மீதான தடையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமான டிக்டாக் செயலியை கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் அதன் தாக்கம் சற்று அதிகமாக இருந்து வருகிறது.இதற்கிடையில், டிக்டாக்’ செயலியில் கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வீடியோக்கள் வருவதால் அதனை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று எஸ். முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் எனவும், அதில் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து ஆப்பிள், கூகுள் நிறுவனத்திற்கும் நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பியது.இதனால் இந்தியாவில் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்தும் டிக் டாக் செயலி நீக்கப்பட்டது. இதற்கிடையில், ‘டிக் டாக்’ நிறுவனம் தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிக் டாக்’ நிறுவன மனுவை விசாரித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்.அன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம், டிக் டாக் செயலி தொடர்பான எந்த முடிவையும் எடுக்காவிட்டால், அச்செயலிக்கான தடை தானாகவே விலகியதாக கருதலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்,இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது,சிறுவர்கள், சிறுமிகள், பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் டிக்-டாக் செயலி மீதான தடையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியுள்ளது. மேலும், டிக் டாக் நிறுவனம் அளித்துள்ள உறுதிமொழியை மீறினால் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

அப்போது பெண்கள், சிறுவர்களை பாதிக்கும் வகையிலும்பாலியல், சமூக சீரழிவுகளை ஏற்படுத்தும் வகையிலும் பதிவுகளை பதிவேற்ற மாட்டோம்.ஆபாச வீடியோக்களை டிக்டாக்கில் பதிவேற்றினால் போனில் டிக்டாக் தானாக செயல் இழந்து விடும். நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து சுமார் 6 மில்லியன் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் தடை செய்யப்பட்டுள்ளன டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க