• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூர் இடைத்தேர்தல்: மூன்றாவது நாளான இன்று இரு வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல்

April 24, 2019 தண்டோரா குழு

சூலூர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய மூன்றாவது நாளான இன்று இரு வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

கோவையை அடுத்த சூலூர் தொகுதியில் வருகிற மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று சமூக நீதிகட்சியை சார்ந்த கணேசன் என்பவர் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து அரசூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் மொத்தம் இது வரை 5 பேர், சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.

மேலும் படிக்க