• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு!

April 23, 2019 தண்டோரா குழு

இலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி இலங்கையில் நேற்றைய தினம் தேவாலயங்களில் பொதுமக்கள் குவிந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பில் 321 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கொண்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 24க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், நியுசிலாந்து கிறிஸ்ட் சர்ச்சில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் ருவன் விஜேவர்த்தனே தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செய்தி நிறுவனமான ‘அமாக்’ நிறுவனம் வாயிலாக தங்கள் அமைப்பு குண்டுவெடிப்பை நடத்தியதாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க