• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு

April 23, 2019 தண்டோரா குழு

கோவை அருகே மின்சாரம் தாக்கி 40வயது ஆண் யானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு பாக்குத்தோப்பிற்குள் 40 வயதுமிக்க ஆண் யானை ஒன்று அங்கிருந்த பாக்குமரங்களை சேதப்படுத்தியது. அப்போது, யானை செத்தப்படுத்தியதில்உடைந்த பாக்குமரம் ஒன்று மின்கம்பி மீது விழுந்ததில் மின்வயர் அறுந்து கீழே விழுந்திருந்தது.

இதையரியாமல் யானை இரவு முழுவதும் பாக்குத்தோட்டத்திற்குள் சுற்றித் திரிந்துள்ளது. இந்நிலையில்,யானை கீழே இருந்த மின்வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பின்னர், இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க