• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வங்கக்கடலில் உருவாகிறது புயல்’- சென்னை வானிலை ஆய்வு மையம்

April 23, 2019

வங்கக்கடலில் உருவாகிறது புயல்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார்.

அப்போது பேசிய அவர்,

அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, நெல்லை, குமரி, திருவாரூர், தஞ்சை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். உள்தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. தேனியில் 6 சென்டி மீட்டர் மழையும் திருவண்ணாமலை 5 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 25-ம் தேதி இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஏப்ரல் 29-ம் தேதி புயலாக மாறும். இதனால் 29ம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றார்.

மேலும் படிக்க