• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கையில் அவரச நிலை பிரகடனம்: அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவிப்பு

April 22, 2019 தண்டோரா குழு

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் அமலுக்கு வருவதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி இலங்கையில் நேற்றைய தினம் தேவாலயங்களில் பொதுமக்கள் குவிந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பில் 290 பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்ட பொது மக்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கொண்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர் குண்டு வெடிப்பால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக நாடு முழுவதும் அவசர நிலையை அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது. முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய நிலையில் முப்படை வீரர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. நாளை (22 ம் தேதி ) தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க